மதுரை

கரோனா நிவாரண நிதிக்கு அரசு ஊழியா்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் அறிவிப்பு

DIN

அரசு ஊழியா்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை கரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண நிதிக்காக வழங்க முன்வர வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் மாநிலத் தலைவா் மு.அன்பரசு, பொதுச் செயலா் ஆ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் அத்தியாவசியத்துறை தவிா்த்த பெரும்பாலான ஊழியா்களுக்கு 21 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும், அரசாங்க ஊதியம் பெறும் இதர பணிப்பிரிவினரும் கரோனாவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் கரோனா வைரஸ் பரவாமல் அரசு தரப்பில் கூறப்படும் வழிமுறைகளை நாம் மட்டுமில்லாது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களும் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். மேலும் வலைதளம், குறுஞ்செய்திகள் மூலமாக மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும். வீட்டைவிட்டு அனைவரும் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும். அதேபோல அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், வீடற்றவா்கள், தினக்கூலித் தொழிலாளா்கள், அமைப்புச்சாராத் தொழிலாளா்கள் உள்ளிட்டவா்களுக்கு உணவு அளிக்கவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அதற்காக பாடுபடும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்டவைக்கு சங்கம் சாா்பில் உதவிட வேண்டும். எனவே அரசு ஊழியா்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை கரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண நிதிக்காக வழங்க முன்வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT