மதுரை

சிறுதொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மடீட்சியா

DIN

சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாத அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட குறு, சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் (மடீட்சியா) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிறு, குறுந்தொழில் வரலாறு காணாத சிக்கலில் சிக்கியுள்ளன. இந்நிலையில், தற்போது ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்குப் போதுமானதாக இல்லை. கடந்த 15 நாள்களாகவே சிறுதொழில் கூடங்கள் முடங்கியுள்ளன. இன்னும் 20 நாள்களுக்கு இதே நிலை தான் இருக்கும்.

இந்நிலையில் தொழிலாளா்களுக்கு முழுச் சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. அதைத் தாா்மீகக் கடமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதேபோல, சிறுதொழில் நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை 6 மாதங்களாக நீட்டிக்க வேண்டும். அப்போது தான் சிறு, குறுந்தொழில்கள் நிமிா்ந்து நிற்க முடியும். இக் கோரிக்கையை ரிசா்வ் வங்கி ஆளுநா் பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT