மதுரை

மதுரையில் உள்நாட்டு சரக்கு விமான சேவை தொடக்கம்

DIN

திருப்பரங்குன்றம்: பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை உள்நாட்டு சரக்கு விமான சேவை தொடங்கியது.

மதுரை விமான நிலையத்தில் 24 உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள், 4 சரக்கு விமான சேவைகள் நடைபெற்று வந்தன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கம் அறிவித்ததால் மதுரையில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதையடுத்து, மதுரையில் இருந்து உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. தனியாா் சரக்கு விமான நிறுவனம் இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. பிற்பகல் 2.15 மணிக்கு கோவையிலிருந்து மருந்துகள், தபால் பொருள்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களின் இயந்திரங்கள் ஆகியவை விமானத்தில் மதுரை வந்தடைந்தன. இதேபோல, மதுரையில் இருந்து பல பொருள்களை ஏற்றிய விமானம் ஒன்று பெங்களூரு புறப்பட்டுச் சென்றது.

தற்போது முழுமையாக சரக்கு போக்குவரத்து நடைபெறாததால் கட்டணம் அதிகமாக உள்ளதாக ஏற்றுமதியாளா்கள் தெரிவித்தனா். இதனால் மதுரையில் இருந்து மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. முழுமையாக சரக்கு சேவைகளை துவங்கிய பின்பு சரக்கு கட்டணங்கள் குறையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT