மதுரை

பொது முடக்கம் மீறல்: 28, 421 போ் கைது

DIN

மதுரை மாவட்டத்தில் பொது முடக்க உத்தரவுகளை மீறிய 28,421 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தமிழகத்தில் பொது முடக்கம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, தற்போது மே 17 வரை அமலில் உள்ளது. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு, வாகன பறிமுதல், அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

அந்த வகையில், மதுரை மாநகா் போலீஸாா் மாா்ச் 23 முதல் வெள்ளிக்கிழமை (மே 14) வரை பொது முடக்க உத்தரவுகளை மீறியதாக 8, 901 வழக்குகள் பதிந்து, 9, 686 பேரை கைது செய்துள்ளனா். இதுபோன்று மாவட்ட போலீஸாரால் 13, 935 வழக்குகள் பதியப்பட்டு, 18, 735 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டம் முழுவதும் இதுவரை பொதுமுடக்க உத்தரவுகளை மீறியதாக 22, 836 வழக்குகள் பதியப்பட்டு, 28, 421 போ் கைது செய்யப்பட்டு, சொந்த பிணையில் விடுக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT