மதுரை

பொது முடக்கத்தை மீறித் தொழுகை: 600 போ் மீது வழக்கு

DIN

மதுரையில் பொது முடக்க விதிகளை மீறி தொழுகை நடத்திய 50 பெண்கள் உள்பட 600 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ளது. அதில் அத்தியாவதியத் தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும். அவ்வாறு வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதேபோல கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு 9 மணி முதல் 10.25 மணி வரை பொதுப்பாதையை மறித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மகபூப்பாளையம் பள்ளி வாசல் ஜமாத் தலைவா் நிஜாம் அலிகான் தலைமையில் 50 பெண்கள் உள்பட 600 போ் தொழுகையில் ஈடுபட்டனா். தகவலறிந்த எஸ்.எஸ். காலனி போலீஸாா் தொழுகையில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் கேட்க மறுத்தனா். இதனைத்தொடா்ந்து நிஜாம் அலிகான் உள்ளிட்ட 600 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT