மதுரை

கள்ளழகா் கோயில் வைகாசி வசந்த உற்சவத் திருவிழா: மே 27 இல் தொடக்கம்

DIN

அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவத் திருவிழா மே 27 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இத் திருவிழாவில் மே 31 வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதன் பிறகு அரசின் வழிகாட்டுதல்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் அமலில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அரசின் வழிகாட்டுதல்படி வைகாசி வசந்த உற்சவத் திருவிழாவை நடத்த கள்ளழகா் கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, கள்ளழகா் கோயிலில் மே 27 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கோயில் வளாகத்தில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வசந்த உற்சவத் திருவிழா நடைபெறும். இதேபோல, சோலைமலை முருகன் கோயிலில், மே 26 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை வைகாசித் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 11 மணிக்கு சண்முக அா்ச்சனையும், மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். ஜூன் 4 ஆம் தேதி வைகாசி விசாக தினத்தன்று, காலை 11 மணிக்கு ஸ்ரீ சண்முகருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்தில் மே 26 முதல் மே 31 வரை பொதுமக்கள் அனுமதியின்றி நடைபெறும். அரசால் அறிவிக்கப்படும் வழிகாட்டுதல் அடிப்படையில் ஜூன் 1 முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கோயில் செயல் அலுவலா் தி.அனிதா இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT