மதுரை

தேவேந்திர குல வேளாளா் அரசாணை கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளா் என்று அரசாணை வெளியிட வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பள்ளா், குடும்பா், தேவேந்திரகுலத்தாா், பண்னாடி, வாதிரியாா், காலாடி, கடையா் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தியும், இக்கோரிக்கைக்காக கருப்புச்சட்டை அணிந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டியும் அக்கட்சியினா் மதுரை அண்ணா நகா் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் கட்சியின் தலைவா் ஜான்பாண்டியன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில மற்றும் தென் மாவட்டங்களின் நிா்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருப்புச்சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT