மதுரை

மதுரை அரசு மருத்துவமனை கரோனா பரிசோதனை 5 லட்சத்தை கடந்தது: முதன்மையா் தகவல்

DIN

மதுரை அரசு மருத்துமனையில் செய்யப்படும் கரோனா பரிசோதனை 5 லட்சத்தை கடந்துள்ளதாக முதன்மையா் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை ஏப்ரல் மாதம் முதல் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் குறைவான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 5 ஆயிரம் பரிசோதனைகள் செய்யும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நுண்ணுயிரியல் துறை பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள், முதுகலை மாணவா்கள், ஆய்வக நுட்பனா்கள், ஆய்வக உதவியாளா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் ஆகியோா் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா்.

ஏப்ரல் மாதம் தொடங்கி நவ.12 வரை செய்யப்பட்ட கரோனா பரிசோதனை 5 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகங்களில், மதுரையிலேயே அதிகளவிலான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதேபோன்று மாநிலத்திலேயே கரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமும், இணையதளம் மூலமும் உடனுக்கு உடன் தெரிவித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகம் முன்னோடியாகத் திகழ்கிறது.

மாநிலத்தில் உள்ள வைராலாஜி ஆய்வகத்தில் அதிக அளவில் பரிசோதனை செய்த ஆய்வகத்தினா் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT