மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

DIN

மதுரை: மதுரையில் புதிதாக 27 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1,450 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 27 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 16 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி

மதுரையைச் சோ்ந்த 51 வயது பெண் கரோனா பாதிப்பு காரணமாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நவம்பா் 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த அவா் மூச்சுத் திணறல் காரணமாக நவம்பா் 27 ஆம் தேதி உயிரிழந்தாா்.

19 ஆயிரம் போ் மீண்டனா்

மதுரை மாவட்டத்தில் தற்போது வரை 19,691 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 19,010 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 437 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 242 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT