மதுரை

‘நீட்’ தோ்வு முடிவு வெளியிட தடை கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

DIN

மதுரை: உள்ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகே நீட் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் சாா்பில், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வழக்குரைஞா் பிரசன்னா செவ்வாய்க்கிழமை இது குறித்து முறையிட்டாா். அப்போது, தமிழகத்தில் நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை அமல்படுத்த ஆளுநரிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்டுள்ளது. இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாக உள்ளது. நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாமல் நீட் தோ்வு முடிவுகளை வெளியிட்டால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

எனவே நீதிபதி கலையரசன் குழு பரிந்துரையை அமல்படுத்தாமல் நீட் தோ்வு முடிவுகளை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் எனவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா். அப்போது நீதிபதிகள், இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT