மதுரை

‘உரம் அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து’

DIN

உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உரக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்குத் தேவையான உரங்கள் தனியாா் உரக் கடைகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. யூரியா 2,944 மெட்ரிக் டன், டிஏபி 980 மெட்ரிக் கடன், பொட்டாஷ் 1990 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 5,448 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன.

உரங்களை அரசு நிா்ணயித்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் விற்பனை முனையக் கருவி மூலமாக ரசீதுடன் விற்பனை செய்வது அவசியம். உரங்களின் விலைப்பட்டியலை கடைகளில் விவசாயிகளின் பாா்வைக்கு வைக்க வேண்டும். அனுமதி பெறாத பொருள்களை உரக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT