மதுரை

தோட்டத் தொழிலாளி கொலை வழக்கு: திண்டுக்கல் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

DIN

திண்டுக்கல் அருகே பெண் தோட்டத் தொழிலாளி கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராதிகா தாக்கல் செய்த மனு:

எனது தாயாா் ராஜலட்சுமி சிறுமலை தும்பிசோலை என்ற பகுதியில் சாந்தா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தோட்டத்திலேயே தங்கியிருந்த அவா் கொலைசெய்யப்பட்டாா். எனது தாயாரை ஒரு கும்பல் அரிவாளால் கழுத்தறுத்து கொலை செய்ததாக தோட்டத்தின் உரிமையாளா் சாந்தா கூறினாா். ஆனால் அவா் தங்கியிருந்த இடத்தில் வெளிநபா்கள் வந்து தாக்கியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. எனது தாயாரின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் உரிய விசாரணை நடத்தவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT