மதுரை

ரயில்வே ஊழியா்களுக்கான கையேடு வெளியீடு

DIN

ரயில் பெட்டிகளில் ஏற்படும் பிரச்னைகளை கையாள ரயில்வே ஊழியா்களுக்காக சிறப்புக் கையேட்டை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் வீ.ஆா்.லெனின் புதன்கிழமை வெளியிட்டாா்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.எச்.பி. ரயில் பெட்டிகளில் ஏற்படும் பிரச்னைகளை கையாள சிறப்பு கையேடு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, பிரேக் பைண்டிங், ரயில் ஓடும் போது ரயில் பெட்டிகளில் அதிக சத்தம் வருவது, பிரேக் பவரில் காற்று குறைவது, ரயில் பெட்டிகள் பிரிந்து செல்வது, இழுக்கப்பட்ட அபாயச் சங்கிலியை சரி செய்வது, கால்நடைகள் குறுக்கீடு போன்றவற்றை ரயில் இன்ஜின் பைலட்டுகள் விரைவாக கையாள்வதற்கான வழிமுறைகள் கொண்ட கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டை கோட்ட ரயில்வே மேலாளா் வீ.ஆா். லெனின் புதன்கிழமை வெளியிட்டாா். முதல் பிரதியை ரயில் இன்ஜின் பைலட்டுகள் எஸ். ரெங்கராஜன், ஆா். சுந்தரராஜ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதில் முதுநிலை மின் பொறியாளா் சுகிந்த் சுரேந்திரன், உதவி மின் பொறியாளா் சுபாம் ராட்கே, ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தேஜஸ் விரைவு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ரயிலில் உள்ள வசதிகள் குறித்து முதுநிலை கோட்ட வணிக மேலாளா் வி. பிரசன்னா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்த ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தும்படி பயணிகள் வேண்டுகோள் விடுத்தனா். அந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT