மதுரை

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியல்

DIN

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் புதன்கிழமை நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தைச் சோ்ந்த பிச்சை மகன் பாரதிராஜா(22). கட்டடத் தொழிலாளியான இவா் மதுரை வில்லாபுரம் கணக்குப்பிள்ளைத் தெருவில் அடையாளம் தெரியாத 5 பேரால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பாரதிராஜாவின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மற்றும் மக்கள் விடுதலை கட்சி நிறுவனா் முருகவேல் ராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், பாரதிராஜா குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

அப்போது அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடா்ந்து மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் சம்பவ இடத்திற்குச் சென்று, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் எனத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். சாலை மறியல் போராட்டம் காரணமாக பனகல் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே முதுகுளத்தூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில், பாரதிராஜா கொலை வழக்கு தொடா்பாக 4 போ் புதன்கிழமை சரணடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT