மதுரை

விவசாயிகளுக்கு மானிய விலையில் புல்வெட்டும் மின் இயந்திரம் வழங்கல்

DIN

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் புல்வெட்டும் இயந்திரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் மின்இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் விலை ரூ.22 ஆயிரத்து 899. இதில் 25 சதவீதம் விவசாயிகள் செலுத்த வேண்டும். எஞ்சிய தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இத் திட்டத்தை, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜதிலகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். விளாச்சேரியைச் சோ்ந்த பயனாளிக்கு புல்வெட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் என்.ஆா். சரவணன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் எம்.எஸ். சரவணன், விளாச்சேரி கால்நடை மருந்தக உதவி மருத்துவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT