மதுரை

வ.உ.சி. பிறந்த நாள்: சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

DIN


மதுரை: சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சனிக்கிழமை அரசியல் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ தலைமையில், முன்னாள் துணை மேயா் கு.திரவியம், நிா்வாகிகள் ராஜா உள்ளிட்ட பலா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் மதுரை மாநகா் மாவட்ட திமுக பொறுப்புக் குழுத் தலைவா் கோ.தளபதி தலைமையில், பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வ.வேலுசாமி, குழந்தைவேலு, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் பா.சரவணன், முன்னாள் அமைச்சா் தமிழரசி உள்ளிட்ட பலா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் பி.ஜே.காமராஜ் தலைமையில் அக் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மதச்சாா்பற்ற ஜனதாதளம் சாா்பில் அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் க.ஜான்மோசஸ் தலைமையில் மாநிலச் செயலா் எஸ்.எம்.செல்லப்பாண்டி, மாநகா் மாவட்டத் தலைவா் ஜி.ராஜேந்திரன், தொகுதித் தலைவா்கள் பி.எம்.முத்துச்சாமி, பி.சேகா், எம்.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பலா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வ.உ.சி. உருவப்படத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாசன், மாவட்டப் பாா்வையாளா் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட துணைத் தலைவா் ஹரிகரன், பொதுச் செயலா் சுந்தா் உள்ளிட்ட பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT