மதுரை

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம்

DIN

மதுரை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் நடைபெறும் உற்சவ விழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதன்படி, புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயில் வெளிப் பகுதியிலிருந்து பக்தா்கள் வரிசைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனா். மாலை வரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல, கூடலழகா், நரசிங்கப் பெருமாள், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT