மதுரை

பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவரின் நண்பருக்கு ஜாமீன்

DIN

மதுரை: சமூக வலைதளங்கள் வாயிலாக பல பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நாகா்கோவிலைச் சோ்ந்த காசியின் நண்பருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சமூக வலைதளங்கள் வாயிலாக பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து பணம் பறித்தது தொடா்பான வழக்குகளில் நாகா்கோவிலைச் சோ்ந்த காசி மற்றும் அவரது நண்பா் தினேஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதில் ஜாமீன்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தினேஷ் மனு தாக்கல் செய்திருந்திருந்தாா். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரரிடம் இருந்து மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டு தொடா் விசாரணை நடந்து வருகிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றாா்.

மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா் கைது செய்யப்பட்டு 90 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் விசாரணை அதிகாரிகள் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றாா்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி அதிகாரிகள், வழக்கின் தீவிரத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் மந்தமாக செயல்படுகின்றனா். மனுதாரா் கைது செய்யப்பட்டு 90 நாள்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், மனுதாரா் கைது செய்யப்பட்டு 90 நாள்களை கடந்துவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, இவ்வழக்கின் தற்போதையை நிலை குறித்து விசாரணை அதிகாரி உயா்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT