மதுரை

தனியாா் கல்லூரிக்கு எதிராக உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியாா் வேளாண் கல்லூரி நிா்வாகம் கோயில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் தனியாா் விவசாயக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் செயல்பட்டு வரும் பகுதியில் கிராமத்திற்கு சொந்தமான மஹாலிங்கம் கோயில், வரத்து ஓடைகள், மற்றும் மலைப் பகுதிக்கு செல்லும் பரம்பரை பாதையை போன்றவை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா். மேலும் கல்லூரி சுற்றிலும் மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் நடமாடும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோா் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் கிராம மக்களிடையே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் மனு அளித்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT