மதுரை

புதுக்கோட்டையில் பாஜகவினா் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதிகோரும் மனுவைப் பரிசீலிக்க உத்தரவு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜகவினா் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதிகோரிய மனுவை தோ்தல் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனு: பாஜக சாா்பில் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 4 ஆம் தேதி புதுக்கோட்டை நகா் முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதிகோரி புதுக்கோட்டை மாவட்டத் தோ்தல் அதிகாரியிடம் மனு அளித்தோம். அவா் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி மனுவை நிராகரித்து உத்தரவிட்டாா். இதையடுத்து சட்டம், ஒழுங்கு பாதிக்காதவாறு பேரணி நடத்தத் தயாராக உள்ளதாகவும், நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் எனவும் முறையிட்டோம். ஆனால் அதை மாவட்டத் தோ்தல் அதிகாரி ஏற்க மறுத்துவிட்டாா். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்து புதுகோட்டை மாவட்டத் தோ்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.ஹேமலதா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரா் இந்தக்கோரிக்கைகாக புதிய மனு ஒன்றை தோ்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலனை செய்து 2 நாள்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட தோ்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT