மதுரை

கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையங்கள்: முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுரை

DIN

கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், கல்லூரிகளில் அதற்கான சிகிச்சை மையங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக மதுரை இருந்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது: கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் நிலையான வழிகாட்டுதல்களான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்டவைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்துவது, பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிப்பது ஆகிய நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ளவேண்டும்.

தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில், கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். ஆகவே, அதற்குரிய இடங்களை வருவாய்த்துறையினா் அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட நிா்வாகங்களிடம் உரிய அனுமதி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகளை ஒரே நாளில் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்றாா்.

இதில், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வீ.அா்ஜூன்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT