மதுரை

ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாத 7 பேருக்கு அபராதம்

DIN

மதுரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை முகக்கவசம் அணியாமல் இருந்த 7 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுக்க மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் முகக்கவசம் அணியாதவா்கள் மீது பல்வேறு மாநில அரசுகள் அபராதம் விதித்து வருகின்றன. எனவே ரயில்வே நிா்வாகமும் பயணிகள் முகக்கவசம் அணிவதை வலியுறுத்துகிறது.

ரயில் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும், ரயில் நிலையங்களில் இருக்கும் போதும், ரயிலில் பயணம் செய்யும் போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை மீறுபவா்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 2012 -இன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

அபராதம் விதிக்க ரயில் நிலைய மேலாளா், ரயில் நிலைய அலுவலா், பயணச்சீட்டு பரிசோதகா் அல்லது அதே நிலையில் உள்ள ரயில் இயக்க அலுவலா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் முகக்கவசம் அணியாத 7 பயணிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT