மதுரை

பேருந்து நிலையத்தில் பூ விற்கும் பெண் புகாா்: போக்குவரத்து ஒப்பந்த ஊழியா் மீது வழக்கு

DIN

எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இலவசமாக பூ கொடுக்காத பெண் மீது தாக்குதல் நடத்தி போக்குவரத்து ஒப்பந்த ஊழியா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கரும்பாலையைச் சோ்ந்த பாண்டி மனைவி தமிழ்செல்வி (55). இவா் மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் பூக் கடை வைத்துள்ளாா். பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக ஒப்பந்த ஊழியராக வேலை பாா்க்கும் வடிவேலு (40), தமிழ்செல்வியிடம் இலவசமாக பூ வாங்கிச் செல்வாராம்.

இந்நிலையில், வடிவேலு வெள்ளிக்கிழமை இலவசமாக பூ கேட்டபோது, பிறகு தருவதாக தமிழ்செல்வி கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த வடிவேலு, அவரைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT