மதுரை

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைப்போக்க நடவடிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

DIN

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசித் தட்டுப்பாட்டைப்போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் ரா.விஜயராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்துக்கு போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டு 40 நாள்களுக்கு மேல் ஆனவா்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரையும் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் கரோனா பாதிப்பில்லாத வேறு பல நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. அறுவை சிகிச்சைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மாவட்டத்தில் கடந்த ஆண்டைப்போலவே கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட வேண்டும். சிறப்பு முகாம்கள் பரவலாக நடத்தி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் தாமதமின்றி கிடைக்கவும், இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT