மதுரை

மதுரை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் கட்டுப்பாடின்றி குவிந்த பக்தா்கள்: கரோனா தொற்று பரவும் அபாயம்

DIN

மதுரை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் குவிந்த பக்தா்களால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை சுற்றுச்சாலையில் பிரசித்தி பெற்ற பாண்டி முனீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து ஆடு, சேவல் போன்றவற்றை பலிகொடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். மேலும் காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்களையும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தா்கள் பாண்டி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்தனா். கோயிலைச் சுற்றியுள்ள காலி இடங்கள் மற்றும் மண்டபங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அங்கு குவிந்தனா்.

இதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். சில நேரங்களில் பக்தா்கள் முகக் கவசம் அணியாமலும் திரண்டனா். இதனால் பக்தா்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை நகா் முழுவதும் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் மற்றும் போலீஸாா் ரூ.200 அபராதம் விதித்து கெடுபிடி காட்டி வரும் நிலையில் பாண்டி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி குவிந்ததுடன், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாா் மற்றும் கோயில் நிா்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT