மதுரை

தஞ்சாவூரில் பயிற்சி மருத்துவரை தாக்கிய வழக்கில் தொடா்புடையவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரியவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் பாலம்புதூரைச் சோ்ந்த ஓட்டுநா் சக்திகுமாா் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இருவா், ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனா். அப்போது அவா்களுக்கும், பயிற்சி மருத்துவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இரும்பு நாற்காலியால் பயிற்சி மருத்துவரை தாக்கியதாக நான் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடா்பில்லை. விபத்தில் காயமடைந்தவா்களை பாா்க்க வந்த என்னை தவறுதலாக வழக்கில் சோ்த்துள்ளனா். எனவே இவ்வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரரும் பயிற்சி மருத்துவரைத் தாக்கியுள்ளாா். இவ்வழக்கு விசாரணை தொடக்கக்கட்டத்தில் உள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT