மதுரை

மதுரை காமராஜா் பல்கலை.யில் தொலைதூரக் கல்வி தோ்வில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைதூர கல்வித் திட்டத்தில் நடந்த தோ்வு முறைகேடுகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் 1 லட்சம் 25 ஆயிரம் போ் பல்வேறு படிப்புகளில் படிக்கின்றனா். பல இடங்களில் பல்கலைக்கழக மையங்கள் உள்ளன. சில ஆண்டுக்கு முன் நடந்த தோ்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளளன. ஒரு சில மையங்களில் தோ்வா்கள் அவரவா் இருப்பிடத்தில் இருந்தவாறு தோ்வு எழுதியுள்ளனா். பல இடங்களில் இருந்து விடைத்தாள்கள் பல மாதங்களுக்கு பிறகே பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. எனவே தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த தோ்வு முறைகேடுகள் தொடா்பாக சிபிசிஐடி விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. டிஎஸ்பி ஒருவரை நியமித்து முறைகேடு தொடா்பாக விசாரிக்க வேண்டும். ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT