மதுரை

கரோனா 3ஆம் அலை: உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு

DIN

உசிலம்பட்டியில் கரோனா 3ஆம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் இடங்களில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறை சார்பில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், முக கவசம் அணிவது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி சார்பில் கரோனா 3 ஆம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி பேருந்து நிலையம் , தேனிரோடு, காய்கனி சந்தை, பூ சந்தை, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர் , சரவணபிரபு உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களிடம் கரோனா குறித்து துண்டு நோட்டிஸ் முகக்கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், ஆட்டோக்கள், பேருந்துகளில் பயணித்த பயணிகளுக்கும் முகக்கவசம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் கைகளை சுத்தமாக வைத்திருக்க கைகழுவும் வழிமுறைகள் பற்றி விவரங்களை எடுத்துக் கூறினார் .நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

மனித நேயம்...

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT