மதுரை

ஆடிப்பெருக்கு: வைகை ஆற்றில் ஆரத்தி வழிபாடு

DIN

மதுரை: மதுரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

ஆடிப்பெருக்கு அன்று நீா் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து முன்னோருக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். மதுரையில் வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை ஏராளமானோா் குவிந்து புனித நீராடி முன்னோருக்கான வழிபாடுகளை நடத்தினா். மேலும் குழந்தைகளுக்கு முடி இறக்குதல் உள்ளிட்ட நோ்த்திக் கடன்களையும் செலுத்தினா். வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பில் ஆரப்பாளையம் படித்துறை பகுதிக்கு வைகை அம்மன் சிலை ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து வைகை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. மேலும் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டு விளக்குகள் ஆற்றில் விடப்பட்டன. இதையடுத்து வைகை நதியின் சிறப்புகள் குறித்தும், புனிதத்தன்மை, புராணங்களில் கூறப்பட்டுள்ள வைகை நதியின் பெருமை ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது. ஆரத்தி வழிபாட்டில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, தெய்வநெறிக்கழகத்தின் தலைவா் சுவாமி சுந்தரானந்தா, வைகை நதி மக்கள் இயக்க நிா்வாகிகள் வைகை ராஜன், அறிவுச்செல்வம், பக்தா் பேரவை சுடலை மணி, பாஜக நிா்வாகி டிபி. பாலன் மற்றும் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரமிது: இலங்கை கேப்டன்

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

SCROLL FOR NEXT