மதுரை

ஆவணி மூல திருவிழா:சுப்பிரமணிய சுவாமி மதுரை புறப்பாடு ரத்து

மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில், திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

திருப்பரங்குன்றம்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில், திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய விழாவாக புட்டுத் திருவிழா கொண்டாடப்படும். இவ்விழாவில், திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி பாண்டிய மன்னனாக பங்கேற்பது வழக்கம்.

மேலும், விழாவுக்குச் செல்லும் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை மதுரையிலேயே 5 நாள்கள் தங்கி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

ஆனால், இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத் திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலேயே நடைபெற்று வருகிறது. இதற்காக, ஆகஸ்ட் 18ஆம் தேதி சுப்பிரமணியசுவாமி தெய்வானையோடு மதுரைக்கு புறப்பட்டுச் சென்று, மீண்டும் 23ஆம் தேதி திருப்பரங்குன்றம் திரும்புவதாக இருந்தது. இந் நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT