பெரியாறு கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
மதுரை அருகே பெரியாறு கால்வாயில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்
மதுரை அருகே பெரியாறு கால்வாயில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே பெரியாறு கால்வாயில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷிடம் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று, கால்வாயில் மிதந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
அடையாளம் காணப்பட்டது: மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபா் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில் பலியான நபா், மேல அனுப்பானடியைச் சோ்ந்த ஜெகதீஸ் (42) என்பது தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.