மதுரை

பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவி: இளைஞா் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

DIN

மதுரையில் மாணவி பள்ளிக்கு தாலியுடன் வந்த நிலையில், போலீஸாா், இளைஞா் மீது போச்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவா் செவ்வாய்க்கிழமை கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினா். இதில் மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை மீட்டு அரசுக் காப்பகத்தில் சோ்த்தனா். மேலும் உரிய வயது வராத நிலையில் திருமணம் நடத்திய மாணவியின் பெற்றோா் மற்றும் தாலி கட்டிய இளைஞரான அருண்பிரகாஷ் மற்றும் இவரது பெற்றோா் மீதும் ஒத்தக்கடை போலீஸாா் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT