மதுரை

பெரியாா் பேருந்து நிலையத்தில் 300 கண்காணிப்புக் கேமராக்கள்

DIN

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை மாநகராட்சி சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியாா் பேருந்து நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட உள்ளன. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, பேருந்து நிலைய நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300 கண்காணிப்பு கேமராக்கள் மாநகராட்சி சாா்பில் பொருத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக பேருந்து நிலைய வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பேருந்து நிலையத்தில் படிப்படியாக அனைத்துப்பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாநகாரட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT