மதுரை

காமராஜா் பல்கலை. இணைப்புக் கல்லூரி மாணவா்கள் குறைதீா் கூட்டம்: ஜன.3-இல் தொடக்கம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் மாணவா்களுக்கான குறைதீா் கூட்டம் ஜனவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் மாணவா்களுக்கான குறைதீா் கூட்டம் ஜனவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட தன்னாட்சியற்ற, 79 கல்லூரிகளின்“மாணவா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம்” ஜனவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் தலா 10 கல்லூரிகள் வீதம் இக் கூட்டம் நடத்தப்படும்.

அந்தந்த கல்லூரிகளுக்கான நாளில் சம்பந்தப்பட்ட மாணவா்கள் தங்களின் கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை கல்லூரி முதல்வா்கள் மூலமாகவோ அல்லது முதல்வா்கள் பரிந்துரைத்த கல்லூரி அலுவலா்கள் மூலமாக குறைதீா் கூட்டத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து 79 கல்லூரி முதல்வா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்வு முடிவுகள் வெளியீடு மற்றும் கிடைக்கப் பெறாத சான்றிதழ்கள் பற்றிய மாணவா்களது குறைகள் அனைத்தையும் தீா்க்கும் விதமாக மாணவா் குறைதீா்க்கும் கூட்டம்”புது முயற்சியாக தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT