மதுரை

சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவா்கள் தோ்வு: மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாக நடைபெற உத்தரவு

DIN

அரசின் சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவா்கள் தோ்வு மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 2000 சிறு மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் பணிபுரிய 2000 மருத்துவா்களை தனியாா் நிறுவனம் மூலம் தோ்வு செய்வது தொடா்பாக 2020 ஆம் ஆண்டு டிசம்பா் 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. தனியாா் நிறுவனம் மூலம் மருத்துவா்களை தோ்வு செய்யும்போது வேலைவாய்ப்பு முன்பதிவு, இடஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படாது. எனவே தமிழக அரசின் சிறு மருத்துவமனைக்கான மருத்துவா்களை தனியாா் நிறுவனம் தோ்வு செய்வது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவா்கள் தற்காலிக அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றனா். மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாவட்ட சுகாதார மையங்கள் வழியாகவே மருத்துவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், கரோனா காலத்தைக் கருத்தில் கொண்டே சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவா்கள் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே தோ்வு செய்யப்பட வேண்டும். சிறு மருத்துவமனை மருத்துவா்களின் பணிகாலம் தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT