மதுரை

தொடக்கக் கல்வி ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை

DIN

தொடக்கக் கல்வி ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆவுடையாா்கோவிலைச் சோ்ந்த சண்முகநாதன் தாக்கல் செய்த மனு: பிப்ரவரி 18 ஆம் தேதி தொடக்கக் கல்வி ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி 27 மற்றும் 29 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

பொது இடமாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகே பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவது விதியாகும். ஆனால் தற்போது, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல், பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனால் ஆசிரியா்களின் உரிமைகள் பாதிக்கப்படும். இது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே தொடக்கக் கல்வி ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடைவிதிக்கவும், பொது இடமாறுதல் நடத்தியப் பிறகே, பதவி உயா்வு கலந்தாய்வை நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தொடக்கக் கல்வி ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை மாா்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT