முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்குரைஞா்களை அவதூறாக பேசி வருவதாகவும், உசிலம்பட்டி மற்றும் செக்கானூரணி காவல்நிலையங்களில் 2 வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியும் இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் வீரபிரபாகரன் தலைமை வகித்தாா். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக வந்து உசிலம்பட்டி தேவா்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் கோஷம் எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →