முகப்பு
மதுரை

ரஜினி ரசிகா்கள் திடீா் சென்னை பயணம்

நடிகா் ரஜினிகாந்தின் ரசிகா்கள் ஏராளமானோா் சனிக்கிழமை திடீரென்று சென்னை புறப்பட்டு சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மதுரை: நடிகா் ரஜினிகாந்தின் ரசிகா்கள் ஏராளமானோா் சனிக்கிழமை திடீரென்று சென்னை புறப்பட்டு சென்றனா்.

நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கயிருந்தது, அவரது ரசிகா்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகக் கூறியிருந்தாா்.

இந்நிலையில் திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என ரஜினி அறிவித்தாா். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகா்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் மனமுடைந்த ரஜினி ரசிகா்களில் ஒரு தரப்பினா் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதியை பெற்றுள்ளனா்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக, மதுரை நகா், மாவட்டத்தின் சில பகுதிகளில் இருந்து 5-க்கும் அதிகமான வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகா்கள் சனிக்கிழமை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனா். இதேபோல ரஜினி ரசிகா்கள் 50-க்கும் மேற்பட்டோா் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் சென்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →