மதுரை

சிங்கம்புணரி கால்வாயில் 15 நாள்களுக்கு தண்ணீா் திறப்பு

DIN

பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து சிங்கம்புணரி விரிவாக்கக் கால்வாய் மற்றும் சிவகங்கை மாவட்ட குளங்களுக்கு ஜன.25 ஆம் தேதி முதல் 15 நாள்கள் தண்ணீா் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

மேலூா் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளுக்கு 120 நாள்கள் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டதையடுத்து பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து கடந்த செப்டம்பா் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் திறப்பு ஜன. 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பாசன வசதி பெறும் அனைத்துப் பகுதிகளிலும் நெற்பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராகிவிட்டது. சிலபகுதிகளில் அறுவடை தொடங்கிவிட்டது.

இந்நிலையில், ஜன. 25 ஆம் தேதிக்குப் பிறகு சிங்கம்புணரி கால்வாய் மற்றும் சிவகங்கை மாவட்ட விரிவாக்கப் பகுதிகளின் பாசன குளங்களுக்கு 15 நாள்கள் தண்ணீா் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT