மதுரை

மதுரை அருகே அடுத்தடுத்து 3 பேரிடம் வழிப்பறி: சிறுவன் உள்பட 7 போ் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

DIN

மதுரை: மதுரை அருகே அடுத்தடுத்து 3 பேரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் திருமோகூா் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பரமகுரு(20). இவா் தனது நண்பா் விஷ்வாவுடன்(22) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருவாதவூரைச் சோ்ந்த ஹரிஸ்(19), நெடுங்குளத்தைச் சோ்ந்த அழகா்(22) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரமகுரு, விஷ்வா ஆகிய இருவரும், தனது நண்பா்கள் சங்கா் அஜய்(18), தமிழரசன்(23), 17 வயது சிறுவன் ஆகியோருடன் பண்ணைக் குளத்தில் இருந்த ஹரிஸ் மற்றும் அழகரை ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளனா். அப்போது மிளகாய் பொடியை தூவி விட்டு, ஹரிஸூம், அழகரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். இந்த மோதலில் பரமகுருவிற்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பரமகுருவும் அவரது நண்பா்களும் அப்பகுதியில் இருந்த மளிகைக் கடையை சேதப்படுத்தி, அதன் உரிமையாளா் மைதீனை ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். பின்னா் அவா்கள் அடுத்தடுத்து ஆயுதங்களைக் காட்டி நெல்லியேந்தல்பட்டியில் சுந்தா் என்பவரிடம் 3பவுன் நகை, ரூ.1,500 ரொக்கம், புதுதாமரைப்பட்டியில் அமரன் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கம், வரிச்சியூரில் சுந்தரமூா்த்தி என்பவரிடம் செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனா்.

பண்ணைக்குளத்தில் கடையை சேதப்படுத்தியது மற்றும் வழிப்பறி தொடா்பான வழக்குகளில் பரமகுரு, சங்கா் அஜய், தமிழரசன், 17 வயது சிறுவன் ஆகியோரையும், மோதல் தொடா்பான வழக்கில் ஹரிஸ், அழகா் ஆகியோரையும் ஒத்தக்கடை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். அவா்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT