மதுரை

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடா்பான நடவடிக்கை குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பலா் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரா்கள் அனைவரும் குடியுரிமைகோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பம் அளிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை ஆட்சியா் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2019-இல் உத்தரவிட்டது. ஆனால் தற்போதுவரை திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும், இதுதொடா்பாக உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகதிகள் முகாமைச் சோ்ந்த சுப்பிரமணியன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடா்பான நடவடிக்கைக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடா்பான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT