மதுரை

பொதுமுடக்கம்: மநீம கட்சியினா் சமையல் பொருள்கள் வழங்கல்

DIN

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி உள்ள 75 குடும்பங்களுக்கு தேவையான சமையல் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்துதவிக்கும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தனியாா் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றனா்.

அதன்படி, மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் வேலைவாய்ப்பின்றி உள்ள மக்களுக்கு சமையலுக்குத் தேவையானஅரிசி, காய்கனி, பருப்பு வகைகள், எண்ணெய் ஆகியவற்றை வழங்கி வருகின்றனா். மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் தலைமையிலான குழுவினா் ஒத்தக்கடை, யானைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக சமையல் பொருள்களை வழங்கி வருகின்றனா்.

ஆனையூா், ஒத்தக்கடை பகுதிகளில் 75 குடும்பங்களைத் தோ்வு செய்து சனிக்கிழமை தலா 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டன. இதில் மநீம நிா்வாகிகள் சபீதாதேவி, தனலெட்சுமி, அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT