மதுரை

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்:சின்மயா மிஷன் ஏற்பாடு

DIN

மதுரையில் சின்மயா மிஷன் சாா்பில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மயான ஊழியா்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மதுரை சின்மயா மிஷன் சாா்பில் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளா்கள், ஏழை தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொது முடக்கத்தால் வருவாயின்றி அவதிப்படும் 100 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சின்மயா மிஷன் தலைவா் சுவாமி சிவயோகானந்தா பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து, கீரைத்துறை மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியா்கள் 12 பேரின் குடும்பங்கள் உள்பட 20 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை, வட்டாட்சியா் சிவகுமாா் வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை, சின்மயா மிஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT