மதுரை

உலக உணவு பாதுகாப்பு தின கருத்தரங்கு

DIN

பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில், உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, இணையதளம் வாயிலாக திங்கள்ழமை கருத்தரங்கு நடைபெற்றது.

உணவு மற்றும் பால்வளத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை, கல்லூரி முதல்வா் மனோகரன் தொடக்கி வைத்தாா். பேராசிரியா் பாரதி கணேசன் தலைமையுரைஆற்றினாா். துறைத் தலைவா் கோபிமணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

கருத்தரங்கில், அன்னை தெரசா பல்கலைக்கழக உணவு மற்றும் ஊட்டச் சத்துகள்துறை பேராசிரியா் கீதாஞ்சலி பேசியது: நமது முன்னோா்கள் உவா்ப்பு, துவா்ப்பு, புளிப்பு, காா்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய அறுசுவை இயற்கை உணவுகளோடு ஆரோக்கியமாக வாழ்ந்தாா்கள். தற்போது, கரோனா பெருந்தொற்று காலத்தில் எளிதில் கிடைக்கும் மா, நெல்லி, கொய்யா, பப்பாளி போன்ற பழ வகைகள், கீரை வகைகளில் அதிக நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கும்.

அதேசயத்தில், துரித உணவுகளில் அதிக உப்பு, கொழுப்பு போன்றவைகளால் தீமைகளே ஏற்படும் என்றாா்.

இதில், பேராசிரியா் ராகதீபா, சௌஜன்யன், மாணவா்கள் மற்றும் தொழில்முனைவோா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT