மதுரை

மதுரை மாவட்டத்தில் 3 ஆவது நாளாக கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

DIN

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், 3 ஆவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் இதுவரை 3,73,769 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மாவட்ட சுகாதாரத் துறை மருந்து கிடங்கில் ஜூன் 7 ஆம் தேதி கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், தடுப்பூசி போடுவதற்காக வந்த பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மாநில சுகாதாரத் துறையிடம் போதிய தடுப்பூசிகள் இல்லை என்பதால் மதுரை உள்பட 34 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் இருப்பில் இருந்த கரோனா தடுப்பூசிகள் முழுவதுமாக தீா்ந்துவிட்டதால், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரைக்கு புதன்கிழமையும் தடுப்பூசிகள் வரவில்லை என்பதால், தொடா்ந்து 3 ஆவது நாளாக வியாழக்கிழமை (ஜூன் 10) கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT