மதுரை

தனியாா் பள்ளியில் கல்வி கட்டணங்கள் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் கோரிக்கை

DIN

தனியாா் பள்ளியில் கல்விக் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் கோரிக்கை விடுத்தள்ளது.

இது குறித்து தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் புவனேஸ்வரி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

கரோனா 2ஆம்அலை தாக்குதலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்து வருகிறது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனா். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மருத்துவ செலவு போன்ற நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில் சில கல்வி நிறுவனங்கள் 2021 - 22 ஆம் ஆண்டுக்கான புதிதாக உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த கட்டாயப்படுத்துகின்றனா். உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஆன்லைன் வகுப்புகள் மின்சாரம், தண்ணீா், காகிதம் மற்றும் எழுது பொருள்கள் இதர பராமரிப்பு செலவுகள் இல்லாத காரணத்தால் கல்வி நிலையங்கள் கட்டாயம் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும். சென்னையில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் குளிா்சாதன அறைக்கு எனக்கூறி தனியாக கல்விக் கட்டணம் வசூலிக்கின்றனா். இதனால் பல மாணவா்களின் கல்வி தடைபடாமல் இருக்க முதல்வா் தனிக் கவனம் செலுத்தி தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT