மதுரை

முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமூகத்தில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநகராட்சி துணை ஆணையா் சங்கீதா தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதேபோல மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையா்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT