மதுரை

வாடிப்பட்டி ஏல மையத்துக்கு இதுவரை இல்லாத வகையில் தேங்காய்கள் வரத்து

DIN

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 1.43 லட்சம் தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன.

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஓராண்டுக்கும் மேலாக தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 45 விவசாயிகள், 1லட்சத்து 43ஆயிரத்து 349 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவை 56 குவியல்களாக வைக்கப்பட்டிருந்தது. மதுரை விற்பனைக் குழுவின் செயலா் மொ்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் 13 வியாபாரிகள் பங்கேற்றனா். அதிகபட்சமாக ரூ 15.76- க்கும் குறைந்தபட்சமாக ரூ 8.32- க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.15.90 லட்சத்திற்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1.43 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், 3 விவசாயிகளின் 155 கிலோ கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 95-க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT