மதுரை

ரத யாத்திரை: போலீஸாா் அனுமதிக்கும் வழித்தடங்களில் 3 நாள்களுக்கு அனுமதியளித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை: மதுரையில் போலீஸாா் அனுமதிக்கும் வழித்தடங்களில் ஸ்ரீ ராமா் கோயில் நிதி சமா்ப்பண ரத யாத்திரைக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்காக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நிதி வசூலிக்க ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்தஷேத்திர அறக்கட்டளையின் சாா்பில் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி அளிக்க மறுத்தது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடா்ந்து அனுமதி பெறப்பட்டது.

அதன் பிறகும் போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.

இதனிடையே ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையா் சாா்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து காவல் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மதுரையில் 3 நாள்கள் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிபதிகள், மதுரையில் போலீஸாா் அனுமதி வழங்கும் வழித்தடத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 4) முதல் 3 நாள்கள் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT