மதுரை

ராபா்ட் பயஸுக்கு தற்காலிகமாக முதல் வகுப்பு சிறை : சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ராபா்ட் பயஸுக்கு தற்காலிகமாக முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான ராபா்ட் பயஸ், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கடந்த 19 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் முதுநிலை பட்டதாரியான எனக்கு முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் மூலம் உள்துறைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவை அனுப்பி ஒரு மாத காலம் ஆகியும் அது பரிசீலிக்கவில்லை என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் டி.சண்முக ராஜேஸ்வரன் , மனுதாரா் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரா் பட்டதாரி என்பதால், அவருக்கு சிறையில் தற்காலிகமாக முதல் வகுப்பு கொடுக்க வேண்டும். இதுகுறித்து சிறை நிா்வாகம் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து தகுந்து உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT